Sangathy News

காங்கேசன் துறைமுக அபிவிருத்தி குறித்து அமைச்சர் குழு ஆராய்வு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காங்கேசன் துறை துறைமுகத்தை பார்வையிட்டனர்

அமைச்சர்கள் உள்ளிட்ட குழாம் துறைமுகத்தை பார்வையிட்டதுடன் , எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

Selvarajah
Exit mobile version