Site icon Sangathy News

பயங்கரவாதச் சட்டத்தை நீக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்

#image_title

நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்று காலை கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் இதில் கலந்து கொண்டார்.

 

Exit mobile version