Site icon Sangathy News

முன்னாள் போராளிகள் அரசியல் மயப்படவேண்டும் – ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்!

#image_title

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் போராளிகள் இன்னும் முழுமையாக அரசியல் மயப்படவில்லை என்பதே அதனால் முன்னாள் போராளிகள் அரசியல் மயப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுவித்துள்ளார்

இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவம் வகிக்கும் அணைத்து இயக்கங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கான அடக்குமுறைகள் மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது

அதே போல் 12,000இற்கு மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் வடக்கு கிழக்கு முழுவதும் காணப்படுகின்றனர் ஆனாலும் அவர்கள் இன்னும் பல அரசியல் அடக்கு முறைகள் மற்றும் புலனாய்வு துறையினரின் பின் தொடரும் தன்மைகள் தொடர்ந்து கொண்டுள்ளது.

இதனை நிறைவுக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து தமக்கான ஓர் அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக தந்துள்ளது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியே ஆகும்

பல கட்சிகளில் பல முன்னாள் போராளிகள் இருந்தாலும் அவர்கள் இன்னொருவருக்கான அரசியல் அங்கீகாரத்திற்காக செயற்பட்டு வருகின்றனர்.

அதனால் அனைத்து புனர்வாழ்வு பெற்ற போராளிகளும் ஓரணியில் திரண்டு தமக்கான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version