Site icon Sangathy News

தங்கள் திருமணத்தை முதன் முறையாக உறுதி செய்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி

#image_title

முதன் முறையாக தாங்கள் திருமணம் செய்யவிருப்பதை விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

பெப்ரவரி 26ஆம் திகதி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி திருமணம் நடைபெறவிருக்கிறது. இது தகவலாக வெளியானாலும், இருவருமே அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள். தற்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களுக்காக அக்கடிதத்தை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி, “நாங்கள் எந்தத் திட்டத்தையும் வகுப்பதற்கு முன்பும், எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பும் நீங்கள் ஏற்கனவே அங்கே உள்ளீர்கள். மிகுந்த அன்புடன் நீங்கள் எங்களுக்கு விரோஷ் (ViRosh) என்று பெயரிட்டீர்கள்.

எனவே இன்று முழுமனதுடன், உங்கள் நினைவாக எங்களது இணைப்பிற்கு நாங்கள் பெயரிடுகிறோம். விரோஷின் திருமணம் என முடிவு செய்திருகிறோம். எங்களை இவ்வளவு அன்புடன் அரவணைத்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்களில் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கடிதத்திற்கு இணையத்தில் பலரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பெப்ரவரி 26ஆம் திகதி திருமணமும், மார்ச் 4ஆம் திகதி திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.

Exit mobile version