சிங்கப்பூரில் ஜூன் 10 முதல் 14 வரை இடம்பெறும் புகழ்பெற்ற மலர்க்காட்சி

சிங்கப்பூரின் புகழ் பெற்ற செயற்கை மலர்க்கண்காட்சி நாளை 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியத் தற்காலக் கலைஞர் சிஜே ஹென்றி உருவாக்கியுள்ள இந்த மலர்க்காட்சி, தென்கிழக்காசியாவில் முதன்முறையாகச் சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான செயற்கை மலர்கள் வாளிகளில் நிரப்பப்பட்டுக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

ஹென்ற வடிவமைத்துள்ள இந்த மலர்கள், 30இற்கும் மேற்பட்ட உண்மையான மலர் வகைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாகத் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதில் சிங்கப்பூர் கண்காட்சிக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எட்டு மலர் வகைகளும் அடங்கும். இக்கண்காட்சி இம்பா தியேட்டரின் கலைக்கூடத்தில் இடம்பெறும்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டுள்ள ஹென்றி, அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களைப் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளாக மாற்றுவதில் உலகப் புகழ்பெற்றவர்.

அவரது இந்த ‘ஃபிளவர் மார்க்கெட்’ கண்காட்சி, முதன்முதலில் கடந்த 2024 செப்ரெம்பரில் நியூயோர்க்கில் தொடங்கப்பட்டது. அபுதாபி, சிட்னி, ஹொங்கொங் போன்ற நகர்களிலும் இக்கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நேரடியாகக் கலைக்கூடத்திற்குச் சென்று பார்வையிடலாம். எனினும், கலைக்கூடத்தின் இடவசதியைப் பொறுத்தே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles