மலேசிய விபத்தில் மாணவிகள் இருவர் பலி!

மலேசியாவின் சரவாக்கின் சிமுன்ஜானில் உள்ள பாடாங் சடோங் பாலத்தில், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறியுடன் கார் மோதியதில், காரில் இருந்த இரண்டு மாணவிகள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

இன்று காலை காலை 6.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 19 வயதான நூர்ஃபஸிலா ரம்லி மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அறிவிக்கப்பட்டதாக மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காரை ஓட்டிச் பெண்ணின் சகோதரர், 30 வயதான ஹருதின் ரம்லி, காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிமுன்ஜான் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள், விபத்து ஏற்படுவதற்கு முன்பு லொறி வீதியோரம் பழுதடைந்திருந்ததைக் கண்டனர் என சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles