Friday, September 27, 2024
Home21.08.2024 - இன்றைய இராசி பலன்

21.08.2024 – இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம்  ஐந்தாம் நாள் புதன்கிழமை. ஆங்கில வருடம் 21.08.2024

இன்றைய இராசி பலன்

மேஷராசி

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபராசி

பணியிடத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதன் மூலம் உங்களின் சமூக வட்டம் விரிவடையும். புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தொழிலில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உறவில் தேவையற்ற விரிசல் ஏற்படலாம்.

மிதுனராசி

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம்.

கடகராசி

கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களின் தடைப்பட்ட சில வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். இன்று சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மராசி

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

கன்னிராசி

நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண் பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளுடன் அனுசரணை யாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

துலாம்ராசி

வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இன்று உலக சுகபோகங்கள் பெருகும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய தந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

விருச்சிகராசி

சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும்.

தனுசுராசி

வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மகரராசி

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் உடல்நலம் தொடர்பாக கவலை ஏற்படும். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக புதிய முயற்சிகளில் ஈடுபட வெற்றி உண்டாகும். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் லட்சியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பராசி

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியே ஏற்படும்.

மீனராசி 

உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தைக் கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments