ட்ரம்பின் ஆலோசகரான தமிழர் பதவி விலகுகிறார்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவரான சிறீராம் கிருஷ்ணன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

இந்தியாவை சேர்ந்த தமிழரான சிறீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு கொள்கைகளை வடிமைத்தவர்களில் முக்கியமானவர். அவர் இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

தனது விலகல் தொடர்பில் தனது சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

‘இந்தப் பயணம் என் வாழ்க்கையின் மிகப் பெரிய பெருமை. இனியும் அமெரிக்கா எதிர்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் பங்களிப்பேன் – என்று கூறியுள்ளார்.

எனினும், அவர் வெள்ளை மாளிகையிலிருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles