Boycott - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 14 Sep 2025 10:38:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Boycott - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி – Boycott சர்ச்சையால் கலக்கத்தில் இந்திய அணி வீரர்கள் https://sangathy.com/2025/09/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa-3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa-3 https://sangathy.com/2025/09/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa-3/?noamp=mobile#respond Sun, 14 Sep 2025 10:38:42 +0000 https://sangathy.com/?p=59892 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. பஹல்காம் தாக்குதல் மற்றும் […]

The post பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி – Boycott சர்ச்சையால் கலக்கத்தில் இந்திய அணி வீரர்கள் first appeared on Sangathy News.

]]>
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் இந்திய வீரர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடையே தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காம்பீர் கூறியதாக அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.

அரசியல் வேறு விளை யாட்டு வேறு. இந்த விஷயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் பி.சி.சி.ஐ. மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். காம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இது தான். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

இவ்வாறு டென் டொஸ்சாட் கூறினார்.

 

The post பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி – Boycott சர்ச்சையால் கலக்கத்தில் இந்திய அணி வீரர்கள் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa-3/feed/ 0 59892
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு தற்காலிக இடைநிறுத்தம்…! https://sangathy.com/2025/05/28/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://sangathy.com/2025/05/28/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81/?noamp=mobile#respond Wed, 28 May 2025 02:12:47 +0000 https://sangathy.com/?p=51063 நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் 2 சங்கங்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. சுகாதார சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சுகாதார அதிகாரிகள் தலையிடத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை 8 மணிக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமானது. நிறைவுகாண் மருத்து சேவையின் ஆய்வுகூட நிபுணர்கள் மற்றும் உடலியக்க நிபுணர்கள் சங்கத்தினர் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த […]

The post நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு தற்காலிக இடைநிறுத்தம்…! first appeared on Sangathy News.

]]>
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் 2 சங்கங்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

சுகாதார சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சுகாதார அதிகாரிகள் தலையிடத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை 8 மணிக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமானது.

நிறைவுகாண் மருத்து சேவையின் ஆய்வுகூட நிபுணர்கள் மற்றும் உடலியக்க நிபுணர்கள் சங்கத்தினர் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் அனைத்து நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என, நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுக்கமைய, மருத்துவ ஆய்வுகூடம் மற்றும் உடலியக்கம் ஆகிய துறைகளுக்கான பயிற்சி நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று பிற்பகல் தெரிவித்தன.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு தற்காலிக இடைநிறுத்தம்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/28/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81/feed/ 0 51063