death - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 31 Dec 2025 17:58:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png death - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-114-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 17:58:06 +0000 https://sangathy.com/?p=64669 இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் […]

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் ‘படோவிற்ற அசங்க’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான ‘அவிஷ்க ஏஷான்’ என்பவர் சந்தேகித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, “படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்” என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற ‘ரஜவத்தே சதுவா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘களுத்துறை நவீன்’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 64669
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/?noamp=mobile#respond Mon, 03 Nov 2025 15:50:37 +0000 https://sangathy.com/?p=62009 நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரத்தில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர். அத்துடன் சம்பவத்தில் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

The post நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரத்தில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

The post நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 62009
ஆப்கானிஸ்தானில் கோரத்தாண்டவம் ஆடிய நில அதிர்வு – பலர் பலி https://sangathy.com/2025/11/03/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be https://sangathy.com/2025/11/03/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/?noamp=mobile#respond Mon, 03 Nov 2025 14:05:49 +0000 https://sangathy.com/?p=61982 ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் சுமார் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சுமார் 260 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது. நில அதிர்வினால் பல்க் (Balkh) மற்றும் சமங்கான் மாகாணங்களின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நில அதிர்வில் […]

The post ஆப்கானிஸ்தானில் கோரத்தாண்டவம் ஆடிய நில அதிர்வு – பலர் பலி first appeared on Sangathy News.

]]>
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் சுமார் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சுமார் 260 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

நில அதிர்வினால் பல்க் (Balkh) மற்றும் சமங்கான் மாகாணங்களின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நில அதிர்வில் 2,200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஆப்கானிஸ்தானில் கோரத்தாண்டவம் ஆடிய நில அதிர்வு – பலர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/03/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/feed/ 0 61982
கனடாவில் இந்தியப் பெண்ணைக் கொலை செய்த நபர் https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25af%2588 https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 17:08:43 +0000 https://sangathy.com/?p=61691 கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த (27) என்னும் இந்திய இளைஞர் மன்பிரீத் சிங் […]

The post கனடாவில் இந்தியப் பெண்ணைக் கொலை செய்த நபர் first appeared on Sangathy News.

]]>
கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த (27) என்னும் இந்திய இளைஞர் மன்பிரீத் சிங் சைனியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மன்பிரீத் சிங் கனடாவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மன்பிரீத்தைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார், அவர் குறித்து ஏதாவது தகவல் தெரியவந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

 

The post கனடாவில் இந்தியப் பெண்ணைக் கொலை செய்த நபர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/feed/ 0 61691
தாய்லாந்து ராணி காலமானார் – தலைவர்கள் இரங்கல் https://sangathy.com/2025/10/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/10/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 16:35:57 +0000 https://sangathy.com/?p=61669 தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது. அந்நாட்டின் மன்னராக மஹ வஜிரலொங்கொர்ன் செயல்பட்டு வருகிறது. இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா (வயது 93). இவர் தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் […]

The post தாய்லாந்து ராணி காலமானார் – தலைவர்கள் இரங்கல் first appeared on Sangathy News.

]]>
தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது.

அந்நாட்டின் மன்னராக மஹ வஜிரலொங்கொர்ன் செயல்பட்டு வருகிறது.

இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா (வயது 93). இவர் தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராணி சிரிகிட் கிடியாகராவின் கணவரான தாய்லாந்து முன்னாள் மன்னர் அதுல்யடிஜ் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தாய்லாந்து ராணி காலமானார் – தலைவர்கள் இரங்கல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/feed/ 0 61669
டெங்கு அபாயம் அதிகரிப்பு: 40,538 பேர் பாதிப்பு https://sangathy.com/2025/10/21/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://sangathy.com/2025/10/21/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/?noamp=mobile#respond Tue, 21 Oct 2025 16:59:41 +0000 https://sangathy.com/?p=61531 இலங்கையில் தற்போது சீரற்ற காலநிலை காரணமாக நுளம்புகளின் அடர்த்தி (Density of mosquitoes) அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 40,538 டெங்கு (Dengue) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில், 44.3% பேர் மேல் மாகாணத்திலும் (Western Province), 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் (Sabaragamuwa Province) உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் […]

The post டெங்கு அபாயம் அதிகரிப்பு: 40,538 பேர் பாதிப்பு first appeared on Sangathy News.

]]>
இலங்கையில் தற்போது சீரற்ற காலநிலை காரணமாக நுளம்புகளின் அடர்த்தி (Density of mosquitoes) அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 40,538 டெங்கு (Dengue) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில், 44.3% பேர் மேல் மாகாணத்திலும் (Western Province), 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் (Sabaragamuwa Province) உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் அவதானிக்கப்படவில்லை என்றாலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக நோய் அதிகரிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகவே இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ள மாவட்டங்களாகவிசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர அடையாளம் கண்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த டெங்கு நோய் பரவலால் இதுவரை 22 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் பெரும்பாலானவை இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

The post டெங்கு அபாயம் அதிகரிப்பு: 40,538 பேர் பாதிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/21/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0 61531
முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார் https://sangathy.com/2025/10/17/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/10/17/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Fri, 17 Oct 2025 14:15:46 +0000 https://sangathy.com/?p=61368 ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு டோமிச்சி முர்யமா மன்னிப்பு கோரினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101. ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். […]

The post முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார் first appeared on Sangathy News.

]]>
ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு டோமிச்சி முர்யமா மன்னிப்பு கோரினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101.

ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முர்யமா வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை மிகவும் பிரபலமானதாகும்.

கடந்த 1945-ம் ஆண்டு, ஜப்பான் அரசு நிபந்தனையின்றி சரணடைந்த பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அந்த தினத்தின் 50-வது ஆண்டு நினைவு நாளையொட்டி முர்யமா ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், போர்க்காலங்களில் ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்த அனைவரும், ஜப்பானின் போர்க்குற்றங்களுக்காக மன்னிப்பு கோரினர். ஆனால் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2013-ம் ஆண்டிற்கு பிறகு மன்னிப்பு கோருவதை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/17/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 61368
யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் பலி https://sangathy.com/2025/10/12/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25af%2580 https://sangathy.com/2025/10/12/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/?noamp=mobile#respond Sun, 12 Oct 2025 04:19:38 +0000 https://sangathy.com/?p=61114 யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார். குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்டபோது கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

The post யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் பலி first appeared on Sangathy News.

]]>
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்டபோது கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

The post யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/12/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/feed/ 0 61114
எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – 137 பேர் பத்திரமாக மீட்பு https://sangathy.com/2025/10/07/%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/07/%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/?noamp=mobile#respond Tue, 07 Oct 2025 05:17:44 +0000 https://sangathy.com/?p=61037 மலைச்சரிவுகளில் மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் பனிப்புயலால் ஏற்பட்டது. உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான திபெத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயலால் ஏற்பட்டது. இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்தநிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த […]

The post எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – 137 பேர் பத்திரமாக மீட்பு first appeared on Sangathy News.

]]>
மலைச்சரிவுகளில் மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் பனிப்புயலால் ஏற்பட்டது.

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது.

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான திபெத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது.

இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயலால் ஏற்பட்டது.

இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்தநிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார்.

இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

The post எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – 137 பேர் பத்திரமாக மீட்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/07/%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0 61037
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு https://sangathy.com/2025/10/05/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf-%25e0%25ae%2587%25e0%25ae%259f https://sangathy.com/2025/10/05/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 10:52:59 +0000 https://sangathy.com/?p=60920   இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் […]

The post இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு first appeared on Sangathy News.

]]>
 

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.

 

The post இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f/feed/ 0 60920