Floods - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 05 Oct 2025 10:44:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Floods - Sangathy News https://sangathy.com 32 32 211647910 நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 47 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/10/05/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25ae%25b4%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8 https://sangathy.com/2025/10/05/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 10:44:47 +0000 https://sangathy.com/?p=60914 நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு நேபாளத்தில் […]

The post நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 47 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் சிலிகுரி – மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 

The post நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 47 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/feed/ 0 60914
பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு https://sangathy.com/2025/10/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b4%25e0%25af%2588-%25e0%25ae%25b5 https://sangathy.com/2025/10/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5/?noamp=mobile#respond Thu, 02 Oct 2025 05:37:14 +0000 https://sangathy.com/?p=60796 பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்து உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) வெளியிட்டு உள்ள செய்தியில், பாகிஸ்தானில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வெள்ள […]

The post பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) வெளியிட்டு உள்ள செய்தியில், பாகிஸ்தானில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இவற்றில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி 504 பேர் உயிரிழந்து உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 304 பேரும், சிந்த் மாகாணத்தில் 80 பேரும் கில்ஜித்-பல்திஸ்தான் மாகாணத்தில் 41 பேரும் உயிரிழந்தனர். ஒட்டு மொத்தத்தில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. வெள்ள பாதிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில், அதிகரித்து காணப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

 

The post பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5/feed/ 0 60796
தென் கொரியாவில்  வெள்ளம், மண்சரிவால் 14 பேர் பலி https://sangathy.com/2025/07/20/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d https://sangathy.com/2025/07/20/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 20 Jul 2025 17:54:21 +0000 https://sangathy.com/?p=56248 தென் கொரியாவில் பல நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 41,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி லீ ஜே-மியுங் (Lee Jae Myung) மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விசேட அனர்த்த வலயங்களாக […]

The post தென் கொரியாவில்  வெள்ளம், மண்சரிவால் 14 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
தென் கொரியாவில் பல நாட்களாகப் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 41,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி லீ ஜே-மியுங் (Lee Jae Myung) மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விசேட அனர்த்த வலயங்களாக அறிவித்துள்ளார்.

அதேநேரம், அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

The post தென் கொரியாவில்  வெள்ளம், மண்சரிவால் 14 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/20/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 56248
சவுதியில் பெய்த கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிய முக்கிய நகரங்கள்! https://sangathy.com/2025/01/07/43107/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=43107 https://sangathy.com/2025/01/07/43107/?noamp=mobile#respond Tue, 07 Jan 2025 14:31:08 +0000 https://sangathy.com/?p=43107 சவுதி அரேபியாவில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது. மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா நகரகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகில் உள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது. மேலும் மெக்கா, […]

The post சவுதியில் பெய்த கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிய முக்கிய நகரங்கள்! first appeared on Sangathy News.

]]>
சவுதி அரேபியாவில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது.

மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா நகரகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகில் உள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post சவுதியில் பெய்த கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிய முக்கிய நகரங்கள்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/07/43107/feed/ 0 43107