News - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 28 Dec 2025 03:50:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png News - Sangathy News https://sangathy.com 32 32 211647910 வானிலை எச்சரிக்கை: பல மாகாணங்களில் மழை மற்றும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது https://sangathy.com/2025/12/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://sangathy.com/2025/12/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 28 Dec 2025 03:50:47 +0000 https://sangathy.com/?p=64198 வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் […]

The post வானிலை எச்சரிக்கை: பல மாகாணங்களில் மழை மற்றும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது first appeared on Sangathy News.

]]>
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post வானிலை எச்சரிக்கை: பல மாகாணங்களில் மழை மற்றும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/feed/ 0 64198
‘கைதி’ திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு! https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 17:06:23 +0000 https://sangathy.com/?p=61688 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக காட்சிகள் அமைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்கி இருந்தார். இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) […]

The post ‘கைதி’ திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு! first appeared on Sangathy News.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் கைதி.

இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக காட்சிகள் அமைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்கி இருந்தார்.

இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் (LCU) கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது.

இந்த நிலையில், கைதி படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்தியின் வெற்றிப் படங்களில் இப்படத்திற்கு தனி இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ‘கைதி’ திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/ 0 61688
அனுராக் உடனான நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்கரா https://sangathy.com/2025/10/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 17:04:48 +0000 https://sangathy.com/?p=61685 இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘மகாராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ரைபில் கிளப்’ படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திலும் நடித்துள்ளார். இவர் […]

The post அனுராக் உடனான நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்கரா first appeared on Sangathy News.

]]>
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.

அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘மகாராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ரைபில் கிளப்’ படத்திலும் நடித்துள்ளார்.

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தனது இயக்கம் மற்றும் திரைக்கதைக்கென 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

சுதா கொங்கர பிரசாத் 2010-ம் ஆண்டு “துரோகி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படத்தினை 2016ல் இயக்கியுள்ளார்.

2020ம் ஆண்டில், ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அனுராக் காஷ்யப் உடனான நட்பு குறித்து இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நாம் கடைசியாக சந்தித்து 15 ஆண்டுகள் ஆகின்றன அனுராக் காஷ்யப்.

எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் – இயக்குநர்.

நாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திந்துக்கொண்ட முதல்நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

மணி சாருக்கும் உங்களுக்கு இடையில் மொழி பெயர்ப்பதில் ஒரு பாலமாக இருந்தேன்.

நீங்கள் மூன்று மணி நேரத்திலேயே என்னை டீக்கோட் செய்துவிட்டீர்கள்.

இருளைச் சார்ந்தவர் நீங்கள் சூரிய ஒளியைப் போன்றவர் நான், எப்போது காதல் கதை எழுதி எனக்குத் தரப் போகிறீர்கள் மிஸ்டர்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

The post அனுராக் உடனான நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்கரா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa/feed/ 0 61685
அமெரிக்காவில் பனிக்குடம் உடைந்தும் செய்தியை வாசித்து முடித்த கர்ப்பிணி தொகுப்பாளர் https://sangathy.com/2025/05/27/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25ae https://sangathy.com/2025/05/27/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae/?noamp=mobile#respond Tue, 27 May 2025 10:38:02 +0000 https://sangathy.com/?p=51021 அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கர்ப்பிணி செய்தியாளரின் பனிக்குடம் உடைந்தபோதிலும் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுள்ளார். ஒலிவியா ஜாக்கித் எனப்படும் ஆல்பனியில் வசிக்கும் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் 3 மணிநேர கடமையை முடித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று Facebook நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி காலை 6 மணிக்குத் தொடங்குவதற்கு முன் தமது பனிக்குடம் உடைந்துவிட்டதாக ஜாக்கித் கூறினார். அதற்கு முந்திய நாளன்று உடல்நலம் சரியில்லை என்பதால் மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்குப் பிரசவ வலி வந்த அறிகுறிகள் தெரியவந்தன. மறுநாள் காலையில் […]

The post அமெரிக்காவில் பனிக்குடம் உடைந்தும் செய்தியை வாசித்து முடித்த கர்ப்பிணி தொகுப்பாளர் first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கர்ப்பிணி செய்தியாளரின் பனிக்குடம் உடைந்தபோதிலும் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுள்ளார்.

ஒலிவியா ஜாக்கித் எனப்படும் ஆல்பனியில் வசிக்கும் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் 3 மணிநேர கடமையை முடித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று Facebook நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி காலை 6 மணிக்குத் தொடங்குவதற்கு முன் தமது பனிக்குடம் உடைந்துவிட்டதாக ஜாக்கித் கூறினார்.

அதற்கு முந்திய நாளன்று உடல்நலம் சரியில்லை என்பதால் மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்குப் பிரசவ வலி வந்த அறிகுறிகள் தெரியவந்தன.

மறுநாள் காலையில் பனிக்குடம் உடைந்தும் அவர் வேலைக்குச் சென்று 3 மணிநேரம் நிகழ்ச்சியைப் படைக்கப்போவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியின்போது அவர் முடிந்தவரை நிகழ்ச்சியைப் படைக்கப்போவதாகவும், தாம் திடீரெனக் காணாமல்போனால் அதன் காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றும் ஜாக்கித் நகைச்சுவையாகப் பேசினார்.

குழந்தை பிறப்பதற்குக் குறிக்கப்பட்ட நாளைக் கடந்து இரு நாட்கள் ஆகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நகைச்சுவையான துணைத் தலைப்புகளைச் சேர்த்துக்கொண்டனர்.

வியாழக்கிழமையன்று தமக்கு மகன் பிறந்துள்ளதாக ஜாக்கித் Instagramஇல் பதிவிட்டார். அது அவரது மூத்த பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் பனிக்குடம் உடைந்தும் செய்தியை வாசித்து முடித்த கர்ப்பிணி தொகுப்பாளர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/27/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0 51021
கேள்வி ஞானம் இருந்தால் சினிமா துறையில் சாதிக்கலாம்-பாக்யராஜ் https://sangathy.com/2025/01/05/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a https://sangathy.com/2025/01/05/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/?noamp=mobile#respond Sun, 05 Jan 2025 12:27:21 +0000 https://sangathy.com/?p=43011 குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 2 நாள் குறும்பட விழா நடைபெற்றது. இதில் 84 குறும்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாளான நேற்று சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. இதில் 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 3 இடங்களை பிடித்த ஆதிகுடி, துணை, கூட்டத்தில் ஒருவன் ஆகிய குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் 15 குறும்படங்களுக்கு […]

The post கேள்வி ஞானம் இருந்தால் சினிமா துறையில் சாதிக்கலாம்-பாக்யராஜ் first appeared on Sangathy News.

]]>
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 2 நாள் குறும்பட விழா நடைபெற்றது.

இதில் 84 குறும்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாளான நேற்று சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.

இதில் 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 3 இடங்களை பிடித்த ஆதிகுடி, துணை, கூட்டத்தில் ஒருவன் ஆகிய குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மேலும் 15 குறும்படங்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.

சினிமாவை கண்டுபிடித்தவருக்கும், நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தவர், எனக்கு ஊக்கம் அளித்த ஆசிரியர்களுக்கு நன்றி.

தோல்வியை கண்டு யாரும் பயப்படக்கூடாது. தோல்வி தான் நமது வெற்றிக்கு முதல் படி. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாததால் உலகில் என்ன நடக்கிறது எனக் கூட தெரியாத நிலை இருந்தது.

விமானம் மேலே பறந்தால் அதிசயமாக பார்ப்பார்கள்.

நாளடைவில் டூரிங் டாக்கீஸ் குத்தகைக்கு எடுத்து படங்களை திரையிட்ட பின்னர்தான் இதுதான் உலகம் என தெரிந்து கொண்டனர்.

இதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்.

கோபி செட்டிபாளையத்தில் முதன்முறையாக கேமராவை எடுத்துக் கொண்டு போன ஒரே நபர் நான் தான்.

அதன்பின்னர் ராசியான ஊர் என்பதால் அங்கு அதிகளவில் படப்பிடிப்புகள் நடந்தது.

நான் முன் அனுபவமே இல்லாமல் கதை எழுதி சினிமாவில் கால் பதித்தேன். அதற்கு கேள்வி ஞானம் இருந்தால் போதும்.

கேள்வி ஞானம் இருந்தாலே சினிமா துறையில் சாதிக்கலாம்.

தற்போது உள்ள இளைஞர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு எங்கும் அலைய வேண்டாம்.

குறும்படங்கள் எடுத்து அதனை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களுக்கு ஏற்றார் போல்படம் இருந்தது என்றால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்.

இன்று பெரும்பாலானோர் குறும்படங்கள் மூலம் தான் திரைப்பட இயக்குனராகி வருகின்றனர்.

சினிமாவில் புதிய தொழில்நுட்பம் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கேற்றார் போல் இளைஞர்களும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post கேள்வி ஞானம் இருந்தால் சினிமா துறையில் சாதிக்கலாம்-பாக்யராஜ் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/05/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0 43011