police - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 31 Dec 2025 17:58:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png police - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-114-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 17:58:06 +0000 https://sangathy.com/?p=64669 இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் […]

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் ‘படோவிற்ற அசங்க’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான ‘அவிஷ்க ஏஷான்’ என்பவர் சந்தேகித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, “படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்” என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற ‘ரஜவத்தே சதுவா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘களுத்துறை நவீன்’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 64669
களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 03:46:53 +0000 https://sangathy.com/?p=64571 களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்குள் […]

The post களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு first appeared on Sangathy News.

]]>
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 64571
அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை சுட்டுக்கொன்ற பொலிஸார் https://sangathy.com/2025/11/01/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/11/01/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/?noamp=mobile#respond Sat, 01 Nov 2025 18:33:25 +0000 https://sangathy.com/?p=61947 அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட சிறுவனின், 68 வயதான பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றபோது, ​​சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த […]

The post அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை சுட்டுக்கொன்ற பொலிஸார் first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட சிறுவனின், 68 வயதான பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றபோது, ​​சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து , வட கரோலினா மாநில புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 

The post அமெரிக்காவில் சிறுவன் ஒருவனை சுட்டுக்கொன்ற பொலிஸார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/01/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/feed/ 0 61947
வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம் https://sangathy.com/2025/10/31/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25af%2588 https://sangathy.com/2025/10/31/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/?noamp=mobile#respond Fri, 31 Oct 2025 07:23:38 +0000 https://sangathy.com/?p=61911 வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையே இந்த பணி இடைநிறுத்தத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

The post வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம் first appeared on Sangathy News.

]]>
வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையே இந்த பணி இடைநிறுத்தத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

The post வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/31/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/feed/ 0 61911
அச்சுறுத்தல் – SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு காவல்துறை பாதுகாப்பு https://sangathy.com/2025/10/26/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-sjb-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-sjb-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d https://sangathy.com/2025/10/26/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-sjb-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 26 Oct 2025 17:28:58 +0000 https://sangathy.com/?p=61747 ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக 2 காவல்துறை அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர். ஜகத் விதான இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய ஜகத் விதான, இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறை மா அதிபர்(IGP) எழுத்துப்பூர்வமாக களுத்துறை பிரதி காவல்துறை மா அதிபருக்கு (DIG) அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். “காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில், வாகனத்திலிருந்து […]

The post அச்சுறுத்தல் – SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு காவல்துறை பாதுகாப்பு first appeared on Sangathy News.

]]>
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக 2 காவல்துறை அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

ஜகத் விதான இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய ஜகத் விதான, இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறை மா அதிபர்(IGP) எழுத்துப்பூர்வமாக களுத்துறை பிரதி காவல்துறை மா அதிபருக்கு (DIG) அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில், வாகனத்திலிருந்து இறங்கும் தருணத்தில் என்னை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் சந்தேக நபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உள்ளது. அதில் ‘நான் சுட்டுக் கொல்லப்படுவேன்’ என எழுதப்பட்டுள்ளது,” என அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் ஜகத் விதான இதன்போது வலியுறுத்தினார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கவலை தெரிவித்ததோடு, வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அண்மையில் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, இவ்வாறான அச்சுறுத்தல்களை இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது என எச்சரித்தார்.

“வெலிகம பிரதேச சபை தலைவர் காவல்துறைப் பாதுகாப்பைக் கோரியிருந்தும் சுட்டுக் கொல்லப்பட்டார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் இவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இது ஒரு வேடிக்கையல்ல. மற்றுமொரு துயரம் நிகழ்வதற்கு முன் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சஜித் பிரேமதாச கூறினார்.

 

The post அச்சுறுத்தல் – SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு காவல்துறை பாதுகாப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/26/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-sjb-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/feed/ 0 61747
பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%259f-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 24 Oct 2025 13:13:22 +0000 https://sangathy.com/?p=61654 இலங்கையின் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து […]

The post பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
இலங்கையின் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 769,933 பேருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஜனவரி 01ஆம் திகதி முதல் இன்று வரை, 67 T56 துப்பாக்கிகள், 73 ரக கைத்துப்பாக்கிகள், 50 ரிவோல்வர்கள் மற்றும் 1,907 ஏனைய ஆயுதங்கள் உட்பட மொத்தம் 2,097 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ஜனவரி 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின், 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா, 32 கிலோ 642 கிராம் கொக்கெய்ன், 582 கிலோ 136 கிராம் ஹஷீஸ், 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3,961,790 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

The post பொலிஸ் விசேட நடவடிக்கையில் 5,414 பேர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/24/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/feed/ 0 61654
இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு https://sangathy.com/2025/09/29/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%2588 https://sangathy.com/2025/09/29/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/?noamp=mobile#respond Mon, 29 Sep 2025 13:11:58 +0000 https://sangathy.com/?p=60650 கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இடையே அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி சென்றிருந்தார். போக்குவரத்து விதியை மீறி அவர் வாகனத்தை நிறுத்தி சென்றதாக தெரிவித்த கோட்டை […]

The post இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு first appeared on Sangathy News.

]]>
கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இடையே அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி சென்றிருந்தார்.

போக்குவரத்து விதியை மீறி அவர் வாகனத்தை நிறுத்தி சென்றதாக தெரிவித்த கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை திட்டியிருந்தார்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார்.

The post இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/29/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/feed/ 0 60650
சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை https://sangathy.com/2025/09/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/09/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 06:02:25 +0000 https://sangathy.com/?p=60383 இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை first appeared on Sangathy News.

]]>
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0 60383
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b5%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Sat, 20 Sep 2025 05:27:40 +0000 https://sangathy.com/?p=60228 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது […]

The post இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

The post இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/20/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 60228
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு https://sangathy.com/2025/09/19/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d-2 https://sangathy.com/2025/09/19/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-2/?noamp=mobile#respond Fri, 19 Sep 2025 04:54:51 +0000 https://sangathy.com/?p=60176 அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

The post அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர்.

அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/19/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-2/feed/ 0 60176