Smartphone - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 04 Nov 2025 18:45:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Smartphone - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஆஸ்டன் மார்டின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்… ரியல்மியின் சூப்பர் அறிவிப்பு..! https://sangathy.com/2025/11/04/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b7%25e0%25ae%25b2%25e0%25af%258d https://sangathy.com/2025/11/04/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 04 Nov 2025 18:45:25 +0000 https://sangathy.com/?p=62045 ரியல்மி GT 8 ப்ரோ இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் புகைப்படங்கள் எடுக்க Ricoh GR இமேஜிங் ஆதரவுடன் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் F1 […]

The post ஆஸ்டன் மார்டின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்… ரியல்மியின் சூப்பர் அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
ரியல்மி GT 8 ப்ரோ இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனாக உள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் புகைப்படங்கள் எடுக்க Ricoh GR இமேஜிங் ஆதரவுடன் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்டன் மார்ட்டின் F1 என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வருகிற 10ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல், பாரம்பரிய F1 அணியின் சின்னமான பச்சை நிறத்தில் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் நிறுவனத்தின் பிரான்டிங் தெரியும். ரியல்மி GT8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 மாடல் சிறப்பு பேக்கேஜிங் மற்றும் அக்சஸரீக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரத்யேக தீம்கள், வால்பேப்பர் மற்றும் ஐகான்களை கொண்டிருக்கும்.

சிறப்பு வடிவமைப்பை தவிர ரியல்மி GT 8 Pro ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய கேமராக்களுடன் வருகிறது. நீங்கள் பின்புற கேமரா தொகுதியை மாற்றி வேறு ஒன்றிற்கு மாற்றலாம். இது சதுரம், வட்டம் மற்றும் “ரோபோ” பாணியில் மற்றும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.

வடிவமைப்பு மற்றும் அம்சங்களைத் தவிர, ஹார்டுவேர் பெரும்பாலும் ரியல்மி GT 8 ப்ரோவின் வழக்கமான மாடலைப் போலவே இருக்கும். இது 6.79-இன்ச் QHD+ (1,440×3,136 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 7,000 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0 உடன் இயங்குகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரியல்மி GT 7 ப்ரோ மாடலில் உள்ள 5,800mAh பேட்டரியில் இருந்து ஒரு பெரிய அப்டேட் ஆகும். இத்துடன் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

புகைப்படங்கள் எடுக்க ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, x ஆப்டிகல் ஜூம் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் கொண்ட 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா ஆகியவை உள்ளன.

 

The post ஆஸ்டன் மார்டின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்… ரியல்மியின் சூப்பர் அறிவிப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/04/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 62045
பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்… வெளியான முக்கிய தகவல்..! https://sangathy.com/2025/10/28/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b8%25e0%25af%258d https://sangathy.com/2025/10/28/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 28 Oct 2025 06:40:28 +0000 https://sangathy.com/?p=61813 நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வகையில், நத்திங் நிறுவனம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த வரிசையில், தற்போது, நத்திங் போன் 3a லைட் விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. புதிய நத்திங் போன் 3a லைட் […]

The post பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்… வெளியான முக்கிய தகவல்..! first appeared on Sangathy News.

]]>
நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வகையில், நத்திங் நிறுவனம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த வரிசையில், தற்போது, நத்திங் போன் 3a லைட் விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. புதிய நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

பிரெஞ்சு வெளியீடான டீ-லேப்ஸ் அறிக்கையின்படி , நத்திங் போன் 3a லைட் நவம்பர் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 04 ஆம் தேதி ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர, பிரான்சில் இந்த ஸ்மார்ட்போன் 249.99 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 25,525) ஆரம்ப விலையில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சில ஐரோப்பிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 239.99 ஆக இன்னும் குறைவாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுதுகிறது. மேலும், நத்திங் போன் 3a லைட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கக்கூடும்.

நத்திங் போன் 3a லைட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

கீக்பென்ச் தள விவரங்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் A001T என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மாலி-G615 MC2 GPU கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வரும் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

The post பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்… வெளியான முக்கிய தகவல்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/28/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d/feed/ 0 61813
7800mAh பேட்டரியுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் https://sangathy.com/2025/10/25/7800mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=7800mah-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://sangathy.com/2025/10/25/7800mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 17:39:49 +0000 https://sangathy.com/?p=61697 ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் பேசப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15 மாடலுடன் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற 27ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகின்றன. ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் சீனா டெலிகாம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன. டெலிகாம் வலைத்தள பட்டியலில் ஒப்போ PLQ110 என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் […]

The post 7800mAh பேட்டரியுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் first appeared on Sangathy News.

]]>
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் பேசப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15 மாடலுடன் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களும் வருகிற 27ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகின்றன.

ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதியாகி இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் சீனா டெலிகாம் வலைத்தளத்தில் வெளிவந்துள்ளன.

டெலிகாம் வலைத்தள பட்டியலில் ஒப்போ PLQ110 என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குயிக்சில்வர், ஃபிளாஷ் வைட் மற்றும் ரேசிங் பிளாக் என மூன்றுநிறங்களில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும், IP66/68/69/69K டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று ஒன்பிளஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7800mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

6.78-இன்ச் (2800×1272 பிக்சல்கள்) 1.5K AMOLED டிஸ்ப்ளே 165Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm பிராசஸர், அட்ரினோ 830 GPU

12GB / 16GB LPDDR5X RAM, 256GB / 512GB / 1TB UFS 4.1 மெமரி

டூயல் சிம் (நானோ + நானோ)

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16

50MP பிரைமரிகேமரா, OIS

8MP 120° அல்ட்ரா-வைடு கேமரா, 4K 60 fps வீடியோ பதிவு

16MP செல்ஃபி கேமரா

இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 7 802.11 be (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4

7800mAh பேட்டரி

120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

 

The post 7800mAh பேட்டரியுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/7800mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 61697
சக்திவாய்ந்த சிப்செட், 7,000mAh பேட்டரி… வெளியீட்டுக்கு ரெடியான ஒன்பிளஸ் 15 https://sangathy.com/2025/10/21/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-7000mah/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-7000mah https://sangathy.com/2025/10/21/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-7000mah/?noamp=mobile#respond Tue, 21 Oct 2025 08:48:13 +0000 https://sangathy.com/?p=61513 ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 […]

The post சக்திவாய்ந்த சிப்செட், 7,000mAh பேட்டரி… வெளியீட்டுக்கு ரெடியான ஒன்பிளஸ் 15 first appeared on Sangathy News.

]]>
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி

சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.

இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சக்திவாய்ந்த சிப்செட், 7,000mAh பேட்டரி… வெளியீட்டுக்கு ரெடியான ஒன்பிளஸ் 15 first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/21/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-7000mah/feed/ 0 61513
6500mAh பேட்டரி, 200MP கேமராவுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன் https://sangathy.com/2025/10/01/6500mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-200mp-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6500mah-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-200mp-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/10/01/6500mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-200mp-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/?noamp=mobile#respond Wed, 01 Oct 2025 17:00:27 +0000 https://sangathy.com/?p=60751 விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது […]

The post 6500mAh பேட்டரி, 200MP கேமராவுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன் first appeared on Sangathy News.

]]>
விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

விவோ V60e அம்சங்கள்:

விவோ இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட் புதிய, விவோ V60e ஸ்மார்ட்போன்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 + IP69 சான்றுகளுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ V60e ஸ்மார்ட்போனில் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கேமராவை பொறுத்தவரை, விவோ V60e ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும்.

 

The post 6500mAh பேட்டரி, 200MP கேமராவுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/01/6500mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-200mp-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/feed/ 0 60751
முழுசா ரூ.37,000 தள்ளுபடி… சலுகையை வாரி வழங்கும் சாம்சங் https://sangathy.com/2025/09/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b0%e0%af%82-37000-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%25b0%25e0%25af%2582-37000-%25e0%25ae%25a4%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%2595 https://sangathy.com/2025/09/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b0%e0%af%82-37000-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95/?noamp=mobile#respond Sat, 20 Sep 2025 05:13:23 +0000 https://sangathy.com/?p=60215 பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சலுகை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் […]

The post முழுசா ரூ.37,000 தள்ளுபடி… சலுகையை வாரி வழங்கும் சாம்சங் first appeared on Sangathy News.

]]>
பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

சலுகை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ்

கேலக்ஸி S24 சீரிசில் கேலக்ஸி S24 அல்ட்ரா, கேலக்ஸி S24 மற்றும் புதிதாக கிடைக்கும் கேலக்ஸி S24 FE ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை 1,34,999 ரூபாயில் இருந்து தற்போது 97,999 ரூபாய்க்கு கிடைக்கிறது

கேலக்ஸி S24 மாடலின் விலை 74,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 39,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.

பட்ஜெட் பிரிவு ஆப்ஷன்கள்:

சாம்சங் அதன் மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ற கேலக்ஸி A, கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.

கேலக்ஸி A சீரிஸ்

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2024 ஆம் ஆண்டில் தங்கள் பிரிவுகளில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்த கேலக்ஸி A55 5ஜி மற்றும் கேலக்ஸி A35 5ஜி ஆகியவை தற்போது 42% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.

கேலக்ஸி A55 5ஜி மாடலின் விலை ரூ. 39,999-இல் இருந்து தற்போது ரூ. 23,999 என குறைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.

கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ்

இளம் பயனர்களை இலக்காகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 30% வரை விலைக் குறைப்பு பெற்றுள்ளன.

கேலக்ஸி M36 5ஜி மாடலின் விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைந்துள்ளது.

கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499-இல் இருந்து தற்போது ரூ. 10,499ஆகக் குறைந்துள்ளது.

கேலக்ஸி M06 5ஜி மாடல் ரூ. 9,999-இல் இருந்து தற்போது ரூ. 7,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி F36 5ஜி விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி F06 5ஜி மாடலின் விலை ரூ. 9,999-இல் இருந்து ரூ. 7,499 என குறைந்துள்ளது.

புதிய விலை மற்றும் சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் AI-சார்ந்த அம்சங்கள் மற்றும் மேம்பட்ட வன்பொருளை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வழி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வருகிற 22ஆம் தேதி முதல் கிடைக்கும்.

 

The post முழுசா ரூ.37,000 தள்ளுபடி… சலுகையை வாரி வழங்கும் சாம்சங் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/20/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b0%e0%af%82-37000-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95/feed/ 0 60215
பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங் https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b8%25e0%25af%258d-2 https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d-2/?noamp=mobile#respond Mon, 15 Sep 2025 15:31:24 +0000 https://sangathy.com/?p=59946 சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வெளியான F16 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 2MP மேக்ரோ […]

The post பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங் first appeared on Sangathy News.

]]>
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வெளியான F16 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கேலக்ஸி ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி F17 5ஜி அம்சங்கள்:

6.7 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

எக்சைனோஸ் 1330 பிராசஸர்

மாலி-G68 MP2 GPU

4 ஜிபி / 6 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7.0

50MP பிரைமரி கேமரா, F1.8, AF OIS

5MP F2.2 அல்ட்ரா-வைடு லென்ஸ்

2MP F2.2 மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ்

13MP F2.0 செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.3, GPS + GLONASS

5000mAh பேட்டரி

25W வேகமான சார்ஜிங்

விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆகும். 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

 

The post பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d-2/feed/ 0 59946
வேற லெவல் அம்சங்களுடன் வெளியீட்டுக்கு தயாராகும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் https://sangathy.com/2025/09/09/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1-%e0%ae%b2%e0%af%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b1-%25e0%25ae%25b2%25e0%25af%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5-2 https://sangathy.com/2025/09/09/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1-%e0%ae%b2%e0%af%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5-2/?noamp=mobile#respond Tue, 09 Sep 2025 07:25:47 +0000 https://sangathy.com/?p=59641 ஒப்போ நிறுவனம் வருகிற 15ஆம் தேதி இந்தியாவில் F31 சிரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் “Durable Champion” என்ற டேக்-லைன் கொண்டுள்ளன. மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் கோல்டு அல்லது ஷாம்பெயின் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மற்றொரு ஸ்மார்ட்போன் டீப் புளூ நிறத்தில் உள்ளது. மேலும் ரிஃப்ளெக்டிவ் அல்லது டெக்ஸ்ச்சர்டு பேக் பேனல் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் பின்புறம் மற்றும் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல் டிசைன் உள்ளது. இவை F31 Pro […]

The post வேற லெவல் அம்சங்களுடன் வெளியீட்டுக்கு தயாராகும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் first appeared on Sangathy News.

]]>
ஒப்போ நிறுவனம் வருகிற 15ஆம் தேதி இந்தியாவில் F31 சிரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் “Durable Champion” என்ற டேக்-லைன் கொண்டுள்ளன. மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் கோல்டு அல்லது ஷாம்பெயின் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

மற்றொரு ஸ்மார்ட்போன் டீப் புளூ நிறத்தில் உள்ளது. மேலும் ரிஃப்ளெக்டிவ் அல்லது டெக்ஸ்ச்சர்டு பேக் பேனல் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் பின்புறம் மற்றும் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல் டிசைன் உள்ளது. இவை F31 Pro மற்றும் F31 Pro+ ஆக இருக்கலாம்.

முந்தைய தகவல்களின் அடிப்படையில் புதிய F31 சீரிசில் F31, F31 Pro மற்றும் F31 Pro+ ஆகியவை இருக்கும். இவற்றில் ஒப்போ F31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

புதிய F31 Pro மாடலில் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 7000 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. ஒப்போ F31 Pro+ மாடில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், 12GB ரேம், 256GB மெமரி, 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 

The post வேற லெவல் அம்சங்களுடன் வெளியீட்டுக்கு தயாராகும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/09/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1-%e0%ae%b2%e0%af%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5-2/feed/ 0 59641
பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங்… சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி https://sangathy.com/2025/09/05/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7000mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-7000mah-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/09/05/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7000mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0/?noamp=mobile#respond Fri, 05 Sep 2025 06:52:49 +0000 https://sangathy.com/?p=59450 ரியல்மி நிறுவனம், தனது ரியல்மி 15 சீரிசின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மி 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் IP66/68/69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் […]

The post பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங்… சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி first appeared on Sangathy News.

]]>
ரியல்மி நிறுவனம், தனது ரியல்மி 15 சீரிசின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மி 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் IP66/68/69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.79 மில்லிமீட்டரிலும் 181 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.

புகைப்படங்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ இரேசர் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 31 நிமிடங்களில் 50% சார்ஜுக்கு 60W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இந்திய சந்தையில் புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,999 என துவங்குகிறது. ரியல்மி 15T ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

 

The post பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங்… சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/05/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7000mah-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0/feed/ 0 59450
ஜப்பானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த திடீர் கட்டுப்பாடு https://sangathy.com/2025/08/29/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/08/29/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/?noamp=mobile#respond Fri, 29 Aug 2025 05:00:52 +0000 https://sangathy.com/?p=59000 தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவற்ரை அதிக அளவு பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் பாரம்பரிய நகரான டோயோக்கேவில் உள்ள பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அந்த நகரின் மேயரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் கூடுவதால் இந்த நடவடிக்கை […]

The post ஜப்பானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த திடீர் கட்டுப்பாடு first appeared on Sangathy News.

]]>
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவற்ரை அதிக அளவு பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் பாரம்பரிய நகரான டோயோக்கேவில் உள்ள பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அந்த நகரின் மேயரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பின்படி நகர பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தேவைப்பட்டால் தொலைபேசி மற்றும் மற்ற பிற தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post ஜப்பானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த திடீர் கட்டுப்பாடு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/29/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/feed/ 0 59000