Srilanka - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Thu, 15 Jan 2026 08:37:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Srilanka - Sangathy News https://sangathy.com 32 32 211647910 நாவற்குழியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு! https://sangathy.com/2026/01/15/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b0-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2026/01/15/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Thu, 15 Jan 2026 08:36:46 +0000 https://sangathy.com/?p=66016 யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை விடிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் […]

The post நாவற்குழியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு! first appeared on Sangathy News.

]]>
யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை விடிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

The post நாவற்குழியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2026/01/15/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 66016
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார் https://sangathy.com/2026/01/12/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2026/01/12/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 12 Jan 2026 02:44:13 +0000 https://sangathy.com/?p=65708 சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ  பயணமாக இன்று  திங்கட்கிழமை இலங்கை வருகிறார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளிவிவகார அமைச்சர்கள் ஆண்டின் முதல் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொள்கின்றனர். இதன்படி, எத்தியோப்பியா, சோமாலியா, தன்சானியா, லெசோதோ நாடுகளுக்கு சென்றுள்ள வோங் யீ அங்கிருந்து நேராக இலங்கை வருகிறார். அவரின் இந்தப் பயணத்தில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுசீரமைப்புக்கு விசேட நிதியுதவி திட்டம் ஒன்றையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கை […]

The post சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார் first appeared on Sangathy News.

]]>
சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ  பயணமாக இன்று  திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.

கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளிவிவகார அமைச்சர்கள் ஆண்டின் முதல் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொள்கின்றனர். இதன்படி, எத்தியோப்பியா, சோமாலியா, தன்சானியா, லெசோதோ நாடுகளுக்கு சென்றுள்ள வோங் யீ அங்கிருந்து நேராக இலங்கை வருகிறார்.

அவரின் இந்தப் பயணத்தில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுசீரமைப்புக்கு விசேட நிதியுதவி திட்டம் ஒன்றையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கை விதித்துள்ள தடையால் புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் அந்த நாடு பின்னடிப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பிலும் புதிய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

வோங் யீ நாட்டில் தங்கியிருக்கும் இந்த இரு நாட்களிலும் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட பல பிரமுகர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவினர் ஜே. வி. பி. தலைமையகத்துக்குச் சென்று பேச்சுகளை நடத்தினர். புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் வருகையின் பிரதான நோக்கம் என்று கூறப்படுகிறது.

The post சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2026/01/12/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 65708
தரம் குறைந்த பொருட்கள் விற்பனை: நுகர்வோர் அதிகாரசபைக்கு 5,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள்! https://sangathy.com/2026/01/02/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b5 https://sangathy.com/2026/01/02/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/?noamp=mobile#respond Fri, 02 Jan 2026 04:41:27 +0000 https://sangathy.com/?p=64860 நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின் ஊடாகவே இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக உணவு மற்றும் உணவு அல்லாத 223 தயாரிப்பு மாதிரிகளை அதிகாரசபை பரிசோதித்துள்ளது. எஃகு கம்பிகள், தேங்காய் எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், அரிசி, டின் மீன், மிளகாய்த் தூள், பால், […]

The post தரம் குறைந்த பொருட்கள் விற்பனை: நுகர்வோர் அதிகாரசபைக்கு 5,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள்! first appeared on Sangathy News.

]]>

நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின் ஊடாகவே இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக உணவு மற்றும் உணவு அல்லாத 223 தயாரிப்பு மாதிரிகளை அதிகாரசபை பரிசோதித்துள்ளது.

எஃகு கம்பிகள், தேங்காய் எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், அரிசி, டின் மீன், மிளகாய்த் தூள், பால், முடி சாயங்கள், சிரப் வகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் அடங்குவதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1977 என்ற நுகர்வோர் முறைப்பாடு சேவை இலக்கத்திற்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 5,002 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவற்றில் சுமார் 79 சதவீத முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

#ConsumerAffairsAuthority #CAA #SriLanka #ConsumerRights #Fines #MarketRaid #PublicHealth #SafeProducts #SriLankaNews #நுகர்வோர்_உரிமை #இலங்கை #அபராதம்

The post தரம் குறைந்த பொருட்கள் விற்பனை: நுகர்வோர் அதிகாரசபைக்கு 5,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2026/01/02/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/feed/ 0 64860
மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியோடு புத்தாண்டில் கால் பதிக்கிறோம்! https://sangathy.com/2026/01/01/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25b3%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be https://sangathy.com/2026/01/01/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/?noamp=mobile#respond Thu, 01 Jan 2026 03:59:27 +0000 https://sangathy.com/?p=64688 மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், […]

The post மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியோடு புத்தாண்டில் கால் பதிக்கிறோம்! first appeared on Sangathy News.

]]>
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.

அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியோடு புத்தாண்டில் கால் பதிக்கிறோம்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2026/01/01/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 0 64688
அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 19:10:15 +0000 https://sangathy.com/?p=64684 இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் தனது அதிகூடிய வருமானத்தை இந்த ஆண்டில் ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 1,660 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வு, நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் […]

The post அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் first appeared on Sangathy News.

]]>
இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் தனது அதிகூடிய வருமானத்தை இந்த ஆண்டில் ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 1,660 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வு, நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

ஆயுர்வேதத் துறை என்பது இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காகச் செயற்பட வேண்டிய, அரசாங்கத்தினால் முதலீடு செய்யப்பட வேண்டிய மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும் என்றும், அதன் பலன்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

The post அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/feed/ 0 64684
‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rebuilding-sri-lanka%25e0%25ae%259c%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25aa https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 19:01:03 +0000 https://sangathy.com/?p=64678 ‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.

The post ‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு first appeared on Sangathy News.

]]>

‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது.

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.

The post ‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/feed/ 0 64678
இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 18:57:41 +0000 https://sangathy.com/?p=64675 2024 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும். அதேபோல், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் 58,454 […]

The post இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>

2024 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும்.

அதேபோல், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் 58,454 சர்வதேச விமானக் கையாளுதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.64% அதிகரிப்பாகும்.

மேலும், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.73% வளர்ச்சியாகும்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும், அமைச்சர்களின் வழிகாட்டலின் கீழ் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்த மைல்கற்களை எட்ட முடிந்தமை இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/feed/ 0 64675
16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=16000-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 18:01:30 +0000 https://sangathy.com/?p=64672 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த 25 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம, பேரலந்த பகுதிகளில் முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிறுவனம், கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, […]

The post 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த 25 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம, பேரலந்த பகுதிகளில் முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிறுவனம், கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபரும், ‘இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனம், கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து ராகம, பேரலந்த பகுதியில் முன்னெடுத்த சோதனையின் போது சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 54 மற்றும் 65 வயதுடைய பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களும் வெளிநாட்டு சிகரெட் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையம் மற்றும் ராகம பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 64672
இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-114-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 17:58:06 +0000 https://sangathy.com/?p=64669 இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் […]

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் ‘படோவிற்ற அசங்க’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான ‘அவிஷ்க ஏஷான்’ என்பவர் சந்தேகித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, “படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்” என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற ‘ரஜவத்தே சதுவா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘களுத்துறை நவீன்’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 64669
துக்கத்தில் பங்குக்கொள்ள டாக்கா புறப்பட்ட விஜித ஹேரத் https://sangathy.com/2025/12/31/%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b3%25e0%25af%258d https://sangathy.com/2025/12/31/%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 03:59:30 +0000 https://sangathy.com/?p=64579 வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின்  இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். #VijithaHerath #SriLanka #Bangladesh #KhaledaZia #Diplomacy #LKA #Dhaka #ForeignAffairs #StateVisit #OfficialVisit #TamilNews #இலங்கை #பங்களாதேஷ் #விஜிதஹேரத் #காலிதாஜியா

The post துக்கத்தில் பங்குக்கொள்ள டாக்கா புறப்பட்ட விஜித ஹேரத் first appeared on Sangathy News.

]]>
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின்  இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

#VijithaHerath #SriLanka #Bangladesh #KhaledaZia #Diplomacy #LKA #Dhaka #ForeignAffairs #StateVisit #OfficialVisit #TamilNews #இலங்கை #பங்களாதேஷ் #விஜிதஹேரத் #காலிதாஜியா

The post துக்கத்தில் பங்குக்கொள்ள டாக்கா புறப்பட்ட விஜித ஹேரத் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/feed/ 0 64579