System - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 24 Oct 2025 13:00:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png System - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா  https://sangathy.com/2025/10/24/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%258e%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be https://sangathy.com/2025/10/24/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/?noamp=mobile#respond Fri, 24 Oct 2025 13:00:03 +0000 https://sangathy.com/?p=61639 இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ […]

The post இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா  first appeared on Sangathy News.

]]>
இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கொடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கம் உள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.

இந்நிலையில் திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்துவைக்க கூரைகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

கூரைகள் திறக்கப்பட்டவுடன் ஏவுகணைகளைச் சுட அனுமதிக்கிறது. இதன்பின் எதிர்தாக்குதலில் இருந்து தப்பிக்க கூரைகள் மீண்டும் மூடப்படும்.

இந்த பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை-வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த வடிவமைப்பைக் கொண்ட ஒரு மாதிரி வளாகம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள கார் கவுண்டியில், இந்தியாவின் நியோமா போர் விமான தளத்திற்கு எதிரே இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

The post இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா  first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/24/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 0 61639
தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சீனா.. ‘செயல்முறை கல்வி’க்கு மாறும் மாணவர்கள் – பலன்கள் என்ன? https://sangathy.com/2025/08/08/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/08/08/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa/?noamp=mobile#respond Fri, 08 Aug 2025 12:34:52 +0000 https://sangathy.com/?p=57598 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது. கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது. உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை […]

The post தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சீனா.. ‘செயல்முறை கல்வி’க்கு மாறும் மாணவர்கள் – பலன்கள் என்ன? first appeared on Sangathy News.

]]>
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.

கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.

உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.

அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.

விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.

இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன.

டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.

சீனாவில் குறிப்பாக மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன.

மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர்.

தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா முனைப்புடன் உருவாக்கி வருகிறது.

 

The post தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சீனா.. ‘செயல்முறை கல்வி’க்கு மாறும் மாணவர்கள் – பலன்கள் என்ன? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/08/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa/feed/ 0 57598