war - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 26 Oct 2025 17:22:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png war - Sangathy News https://sangathy.com 32 32 211647910 போர் தொடுப்போம் – பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் பாகிஸ்தான் https://sangathy.com/2025/10/26/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/10/26/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 26 Oct 2025 17:22:44 +0000 https://sangathy.com/?p=61741 ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் அதன் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. அதன்படி, தோஹாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டு கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே 2 […]

The post போர் தொடுப்போம் – பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் பாகிஸ்தான் first appeared on Sangathy News.

]]>
ஆப்கானிஸ்தான் மீது நேரடியாக போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் அதன் எல்லையில் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன.

அதன்படி, தோஹாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டு கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே 2 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் ஆரம்பமானது.

எனினும் அதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

 

The post போர் தொடுப்போம் – பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் பாகிஸ்தான் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/26/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/ 0 61741
ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல் https://sangathy.com/2025/10/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25b7%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259f https://sangathy.com/2025/10/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f/?noamp=mobile#respond Tue, 14 Oct 2025 03:57:41 +0000 https://sangathy.com/?p=61210 உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார். டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், […]

The post ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல் first appeared on Sangathy News.

]]>
உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார்.

டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், “உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.

 

The post ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f/feed/ 0 61210
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் https://sangathy.com/2025/10/12/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d https://sangathy.com/2025/10/12/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 12 Oct 2025 04:29:40 +0000 https://sangathy.com/?p=61133 இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது. எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, போர் நிறுத்த […]

The post இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் first appeared on Sangathy News.

]]>
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.

எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.

இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.

 

The post இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/12/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/feed/ 0 61133
காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் – டிரம்ப் https://sangathy.com/2025/10/04/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d https://sangathy.com/2025/10/04/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 04 Oct 2025 06:52:08 +0000 https://sangathy.com/?p=60853 காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. கடந்த திங்களன்று இஸ்ரேல் இந்த அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹாமாஸ் ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது. அமைதி திட்டத்தில் உள்ள […]

The post காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் – டிரம்ப் first appeared on Sangathy News.

]]>
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

கடந்த திங்களன்று இஸ்ரேல் இந்த அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹாமாஸ் ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.

அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அவரின் சொந்த சமூக வலைதள பதவில், ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.

இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்!

இப்போது, தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

The post காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் – டிரம்ப் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/04/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/feed/ 0 60853
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க டிரம்ப் திட்டம் – ரஷியா ரியாக்ஷன் https://sangathy.com/2025/09/30/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%8f%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25a4%25e0%25af%2582%25e0%25ae%25b0-%25e0%25ae%258f%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2589%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/09/30/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%8f%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0/?noamp=mobile#respond Tue, 30 Sep 2025 05:22:09 +0000 https://sangathy.com/?p=60679 ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் […]

The post நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க டிரம்ப் திட்டம் – ரஷியா ரியாக்ஷன் first appeared on Sangathy News.

]]>
ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார்.

 

The post நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க டிரம்ப் திட்டம் – ரஷியா ரியாக்ஷன் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/30/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%8f%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0/feed/ 0 60679
புதினை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பாவுக்கும் போர் விரிவடையும்.. ஐ.நாவில் உக்ரைன் அதிபர் எச்சரிக்கை https://sangathy.com/2025/09/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1 https://sangathy.com/2025/09/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/?noamp=mobile#respond Thu, 25 Sep 2025 04:39:48 +0000 https://sangathy.com/?p=60435 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார். ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன. ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற […]

The post புதினை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பாவுக்கும் போர் விரிவடையும்.. ஐ.நாவில் உக்ரைன் அதிபர் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
80வது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்து வருகிறது.

நேற்றைய கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “புதினை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்துவார்.

ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன.

ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும்.

ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை புதினின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை மேற்குலகம் ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. அதேபோல ஐரோப்பிய நாடுகள் மோல்டோவாவையும் ரஷியாவிடம் இழந்துவிடக் கூடாது.

ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.

அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது.

தற்போது உலகின் ராணுவத் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மனித வரலாற்றிலேயே மிக அழிவுகரமான ஆயுதப் போட்டியில் வாழ்கிறோம். “யார் பிழைக்கிறார்கள் என்பதை ஆயுதங்களே தீர்மானிக்கின்றன.

டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன.

ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை.

சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன. நேட்டோவில் இருப்பது மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்காது.

 

The post புதினை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பாவுக்கும் போர் விரிவடையும்.. ஐ.நாவில் உக்ரைன் அதிபர் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/25/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/feed/ 0 60435
அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம்: ரஷிய அதிபர் புதின் https://sangathy.com/2025/09/23/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%2581-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25a4-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/23/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 05:41:39 +0000 https://sangathy.com/?p=60356 அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். என்றார். ரஷிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்போது புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

The post அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம்: ரஷிய அதிபர் புதின் first appeared on Sangathy News.

]]>
அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். என்றார்.

ரஷிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்போது புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம்: ரஷிய அதிபர் புதின் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0 60356
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%2585-5 https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 05:37:24 +0000 https://sangathy.com/?p=60350 பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி […]

The post பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.

உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/feed/ 0 60350
பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது – உலக நாடுகளுக்கு நெதன்யாகு எச்சரிக்கை https://sangathy.com/2025/09/22/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://sangathy.com/2025/09/22/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/?noamp=mobile#respond Mon, 22 Sep 2025 12:21:16 +0000 https://sangathy.com/?p=60318 பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி […]

The post பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது – உலக நாடுகளுக்கு நெதன்யாகு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் சமீபத்திய முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அளிக்கப்படும்.

அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வரும் தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு இருக்காது.

பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக, அந்தப் பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்திருக்கிறேன். இதை நாங்கள் உறுதியுடனும், சாதுர்யமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம், மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

 

The post பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது – உலக நாடுகளுக்கு நெதன்யாகு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/22/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/feed/ 0 60318
சூடான்: மசூதி மீது துணை ராணுவம் டிரோன் தாக்குதல் – 43 பேர் பலி https://sangathy.com/2025/09/20/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%2588-%25e0%25ae%25b0%25e0%25ae%25be https://sangathy.com/2025/09/20/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be/?noamp=mobile#respond Sat, 20 Sep 2025 04:55:09 +0000 https://sangathy.com/?p=60188 சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது, தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் […]

The post சூடான்: மசூதி மீது துணை ராணுவம் டிரோன் தாக்குதல் – 43 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,

தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.

குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

 

The post சூடான்: மசூதி மீது துணை ராணுவம் டிரோன் தாக்குதல் – 43 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/20/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be/feed/ 0 60188