திரு பரராஜசிங்கம் நடராஜசிங்கம்

தோற்றம்24 FEB 1951, மறைவு12 OCT 2022
வயது 71
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் நடராஜசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

ஓர் திங்கள் ஆனதுவோ… கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ….!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால்
வாடும் குடும்பத்தினர்..!!!! 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles