அமரர் வேலாயுதம் பராசக்தி

விண்ணில் – 18 NOV 2017

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka Lohne, Germany

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜேர்மனி Lohne(Old) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் பராசக்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:23/11/2022.

அன்பைக் குழைத்து அமுதமாய் ஊட்டி
எங்களை ஆளுமையோடு வளர்த்தெடுத்த
எங்கள் அம்மாவே நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஆண்டவன் அடிசேர்ந்து ஆண்டுகள் ஐந்தானதே அம்மா!

யாருமில்லாத அநாதைகள் போல் ஆனதே
எங்களின் வாழ்வு. உங்களின் இடத்தை நிரப்ப
யாருமில்லையேயம்மா எங்களுக்கு. இவ்வுலகில்
வெறுமையான உணர்வுடனும், வேதனையுடனும்
அன்பு முகம் தேடி அலைகின்றோம்.

உங்களின் அணைப்பும், அன்பும், ஆறுதல்வார்த்தைகளும்,
சிரிப்பும் எங்கள் நினைப்பில் நிழலாய்த் தொடர்கின்றன.
துன்பங்கள் வரும்போது ஏங்குகின்றோம் உங்கள் மடி தேடி.
இன்பங்கள் வரும்போது ஏங்குகின்றோம் எங்களுடன்
அம்மா இல்லையே என்று.

ஏனம்மா எங்களை விட்டுப் பிரிந்தீர்கள். இன்னும்
சிலகாலம் எங்களுடன் வாழ்ந்திருக்கலாம் என்று
தினமும் தவிக்கின்றோம் அம்மா.

இப்பிறப்பில் இழந்துவிட்டோம் உங்களை
எப்பிறப்பில் எங்கே தேடுவோம் அம்மா.
இவ்வுலகில் வாழ்ந்தவரை எங்களின் மனித தெய்வமாய்
வாழ்ந்தீர்கள். உங்களுடன் வாழ்ந்த வசந்த காலத்தின்
நினைவுகளுடன் உங்களின் ஆத்மப் பிரார்த்தனையை
அன்னை முத்துமாரியின் திருவருட் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles