
பிறப்பு19 JUL 1941, இறப்பு30 NOV 2021
வயது 80
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) செட்டிக்குளம், Sri Lanka Liestal, Switzerland
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Liestal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2022
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஓவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
