திருமதி சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

9 DEC 1935, இறப்பு28 NOV 2022

வயது 86

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) நல்லூர், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்
அவனியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றோம்
நிஜமாய் நாம் வாழ்ந்தோமா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்…!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
உங்கள் முகம் என்னாளும் உயிர்வாழும்
மண்விட்டு மறைந்த நீங்கள் விண்னோக்கி
சென்றாலும் கண்விட்டு மறையாமல்
பலகாலம் இருப்பீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

எங்கள் அன்புத் தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு உடன் ஓடோடி வந்து ஆறுதல் கூறியோருக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள் என்றும் உரித்தாகுக.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் 07-01-2023 சனிக்கிழமை அன்று வீட்டுக்கிருத்தி கிரியைகள் மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles