திரு தம்பிஐயா தர்ஷன்

அன்னை மடியில்04 MAY 1986, இறைவன் அடியில்20 DEC 2022

வயது 36

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டியம்பதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தர்ஷன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நேற்று நீ இருந்தாய் தம்பி
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது தம்பி
நீ கலைந்துபோன
கணம் மட்டும்
நினைவில் இல்லையய்யா..!

உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதய்யா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன

மீட்டும் விரல்களை தொலைத்த
வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவனே..! நீ எங்கே?

காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீ – எம்மோடு
வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
என்றும் நீங்காத சோகம்
எம் நெஞ்சங்களோடு

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் வீட்டுக்கிரியை 19-01-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles