அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)

பிறப்பு11 OCT 1950, இறப்பு13 FEB 2021

வயது 70

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) முல்லைத்தீவு, Sri Lanka Sarcelles, France

யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய
பாச மடியும் இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில்
ஓயாத அலைகளாய் ஒவ்வொரு
நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின்
ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!

வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றோம்.
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles