அன்னை மடியில்14 JUN 1942, இறைவன் அடியில்15 MAR 2022

வயது 79

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு, Sri Lanka கொழும்பு, Sri Lanka Basel, Switzerland

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை மீனாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-04-2023

வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்

அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!

ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!

அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில் முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் எங்களுக்கு
அம்மம்மாவாக வந்திடுங்கள் காத்திருப்போம்!

கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்

அன்னாரின் முதலாம் ஆண்டு திவசக் கிரியைகள் 03-04-2023 பங்குனி மாதம் திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அதனைத் தொடர்ந்து நடைபெறும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here