பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிளும் கேரள கஞ்சாவுடன் கைது

Colombo (News 1st) கிளிநொச்சி – பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் வரித் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, கொழும்பிலிருந்து சென்ற விசேட குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு கிலோ 250 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles