ஹாலி எலயில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

Colombo (News 1st) பதுளை – ஹாலி எல போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட 10 வயது சிறுவன் இன்று முற்பகல்  சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் 07 வயதான தங்கை, நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து  தேடுதல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு சிறுவர்களின் சடலங்களையும் நீதவான் விசாரணைகளின் பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles