பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆர்மி சனத் கைது

Colombo (News 1st) பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான ஆர்மி சனத் என்பவர் அஹங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் ​போது, 15 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான ஹரக் கட்டாவினால் இலங்கையில் புரியப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை குறித்த சந்தேகநபரே வழிநடத்தியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஹரக் கட்டாவின் வழிநடத்தலின் கீழ் கடந்த காலங்களில் நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டுசென்றமை, சம்பவங்களின் பின்னர் துப்பாக்கிகளை சுத்தம் செய்து ஹரக் கட்டாவின் ஆலோசனைக்கு அமைய பல நபர்களிடம் கையளித்தமை உள்ளிட்ட விடயங்களும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles