நியூஸிலாந்து அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை வெற்றி

Colombo (News 1st) நியூஸிலாந்து அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.

சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.

இரு அணிகளும் சம ஓட்டங்களை பெற்ற நிலையில், வெற்றியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சுபர் ஓவரில் மிக சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணி, 8 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்களை கைப்பற்றி நியூஸிலாந்து அணியை கட்டுப்படுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles