அங்கொட லொக்காவின் உதவியாளர் கைது

Colombo (News 1st) அங்கொட லொக்காவின் உதவியாளர் என கூறப்படும் அத்துருகிரியே ஜெரம் என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பகுதியிலுள்ள கடையொன்றுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜெரம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles