எதிர்வரும் 5 ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும்: கிறிஸ்டலினா ஜோர்ஜிவா

Colombo (News 1st) எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா  (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகும் மிகவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முரண்பாடுகளை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட தாக்கம், ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால், நிதி உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles