பாடசாலை மாணவர்களுக்கு 80% சீருடைகள் விநியோகம்; ஏனையோருக்கு விரைவில்…

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில்  80 வீதமானவை  விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 20 வீத சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக சீனாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த சீருடைகளில்  70 வீதமானவை வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 05 மாகாணங்களில் 30 வீதமான சீருடைகள்  விநியோகிக்கப்படவுள்ளன. 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் பிக்கு மாணவர்களுக்கும் இந்த சீருடைகள்  விநியோகிக்கப்படவுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles