Monday, February 9, 2026
Homeதொலைக்காட்சி நேர்காணலின் போது துப்பாக்கிச்சூடு: முன்னாள் MP பலி

தொலைக்காட்சி நேர்காணலின் போது துப்பாக்கிச்சூடு: முன்னாள் MP பலி

Colombo (News 1st) குற்றச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆதிக் அஹமட் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது துப்பாக்கிதாரிகள் சிலர் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஊடகவியலாளர்களை போன்று அங்கு வந்திருந்த துப்பாக்கிதாரிகளே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஊடகவியலாளர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோக  சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌி்யிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular