Monday, February 9, 2026
Homeஅயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வலுவான நிலையில்...

அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வலுவான நிலையில்…

Colombo (News 1st) இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று(16) ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதற்கமைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

முதல் விக்கெட்டிற்காக களமிறங்கிய திமுத் கருணாரத்ன மற்றும் நிசான் மதுஸ்க ஆகியோர் முதல் விக்கெட்டிற்காக 64 ஓட்டங்களை பெற்றனர்.

மதுஷ்க 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் இணைந்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர்.

அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 139 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றார்.

அவருடன் சிறந்த இணைப்பாட்டத்தை வௌிப்படுத்திய குசல் மென்டிஸ், டெஸ்ட் அரங்கில் 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.

திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டிற்காக 281 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களை பெற்றார்.

அஞ்சலோ மெத்தியூஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களை பெற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular