Sunday, February 8, 2026
Homeதமிழ்நாடு - தலைமன்னாரை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் - இந்திய பிரதமருக்கு கலாநிதி...

தமிழ்நாடு – தலைமன்னாரை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் – இந்திய பிரதமருக்கு கலாநிதி வீராசாமி கடிதம்

Colombo (News 1st) தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என நரேந்திர மோடிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular