முல்லைத்தீவில் கொள்ளையர்களால் குடும்பஸ்தர் அடித்துக் கொலை

Colombo (News 1st)  முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம்,10 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு பொலிஸார், தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேகநபர்களின் தடயங்கள் தொடர்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி,சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு,  பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles