சூடானில் இருந்து மேலும் 6 இலங்கையர்கள் மீட்பு

Colombo (News 1st) சூடானில் சிக்கியிருந்த மேலும் சில இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

6 இலங்கையர்கள் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

ஜித்தாவிலுள்ள கன்சியூலர் அலுவலக அதிகாரி குறித்த இலங்கையர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் உதவியுடன் இதற்கு முன்னர் சூடானில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இதுவரையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தோரின் எண்ணிக்கை 4200 ஆக பதிவாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles