ரயில் கடவையிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

Colombo (News 1st) களுத்துறை தெற்கு பிரதேசத்தில் காலி வீதியினை அண்மித்து காணப்படும் ஹோட்டல் ஒன்றுக்கு பின்பகுதியிலுள்ள ரயில் கடவையில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுத்துறை நாகொட பகுதியைச் செர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி, பெண்ணொருவர் மற்றும் இரண்டு ஆண்கள் நேற்று(06) மாலை குறித்த ஹோட்டலில் இரு அறைகளில் தங்கியிருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தம்பதியினரும் சிறுமியுடன் வந்த இளைஞரும் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் ஹோட்டலில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரயில் கடவையில் இருந்து சிறுமியின் நிர்வாண சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியுடன் வருகை தந்த இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles