வவுனியாவில் பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு இளைஞர் தற்கொலை

Colombo (News 1st) வவுனியா – பறயனாலங்குளம், நீலியாமோட்டை பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரும் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டினுள் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒன்றரை வயது குழந்தையின் தாயான 24 வயது பெண் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அப்பெண்ணை திருமணத்திற்கு முன்னதாக ஒருதலையாகக் காதலித்த 24 வயதான இளைஞரால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், அந்த இளைஞரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீலியாமோட்டை கோவிலுக்கு அருகில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கட்டுத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles