பாத யாத்திரையின் இடைநடுவே உயிரிழந்த யாத்திரிகர்

Colombo (News 1st) யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான குறித்த யாத்திரிகர் உயிரிழந்துள்ளதாக யாத்திரை மேற்கொள்ளும் ஏனைய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கைதடி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு 60 யாத்திரிகர்கள்   யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 06 ஆம் திகதி பாத யாத்திரையை ஆரம்பித்திருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles