அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் (சாரதா)

பிறப்பு05 MAY 1956, இறப்பு08 JUN 2010

வயது 54

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Thun, Switzerland

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
பதிமூன்று ஆண்டுகள் ஆனதம்மா…

ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதனில்
ஏங்கி வாடுகின்றோம்…
நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?

ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்….
ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!

நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்…

உந்தன் ஆத்மா
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்…

உங்கள் பிரிவால் வாடும் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles