அமரர் நாகம்மா இலகுப்பிள்ளை

பிறப்பு16 DEC 1935, இறப்பு07 JUN 2012

வயது 76

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா இலகுப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அம்மாவே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ…??

மடியினிலே தூங்கிவிட
மண்ணிலே நீருமில்லை….
தேடியே பார்க்கின்றோம்
தேற்ற யாருமில்லை..

ஓடியே போனது பதினொரு ஆண்டுகள்
தட்டிக் கொடுத்துவிட தந்தையுமில்லை
கட்டி அணைத்துவிட தாயுமில்லை கதறுகிறோம்.

கொட்டிக் கொடுத்துவிட
கோடி இருந்தென்ன
ஊட்டி வளர்த்துவிட்ட
தாய்க்கு ஈடாகுமா???

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
எமையெல்லாம் வாழவைத்து
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகள்- எங்கள்
உதிரத்தில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles