மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் பலி

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – தென்மராட்சி வரணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் இன்று(06) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles