ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட 19 பேர் கைது

Colombo (News 1st) ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் அமைதியற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம கடற்கரையில் படகொன்று தொடர்பில் இரு தரப்பினருக்கிடையே அண்மையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அமைதியற்ற முறையில் செயற்பட்டமையின் காரணமாக, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டியில் இருந்து வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

24 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட ரத்கம மற்றும் தொடன்துவ பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles