குற்றச்செயல்களில் ஈடுபடும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க கைது

Colombo (News 1st) குற்றச்செயல்களில் ஈடுபடும் பக்கலா என அழைக்கப்படும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க என்பவர்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஊரகஸ்மன்ஹந்திய – கொரகீன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல்காரரான மைக்கல் என அழைக்கப்படும் பிரதீப் ஜயவர்தன என்பவருடன் குறித்த சந்தேகநபர் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

44 வயதான பக்கலா என அழைக்கப்படும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க, ஊரகஸ்மன்ஹந்திய பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles