இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா மீண்டும் உறுதி

Colombo (News 1st) இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் நேற்று(25) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சீன வௌியுறவு அமைச்சர் Qin Gang இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு இயலுமான வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சீன வௌியுறவு அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பு தொடர்பில் சீனா முன்மாதிரியாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அமைச்சர் அலி சப்ரியின் சீன சுற்றுப்பயணம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.

இதன்போது உலக அபிவிருத்தி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் அலி சப்ரி கலந்துகொள்ளவுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles