இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது

Colombo (News 1st) எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகுகளுடன் காங்கேசன்துறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 74 இந்திய மீனவர்களையும் அவர்களின் 12 ட்ரோலர் படகுகளையும் கைப்பற்றி சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles