சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவந்த இருவர் கைது

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் கொண்டுவந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிலோ 780 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவரும் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து வருகை தந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெல்லம்பிட்டி மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 52 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடியே 80 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 814 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்ல முயற்சித்த பெண்ணொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles