மட்டக்களப்பு – திக்கோடையில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு

Colombo (News 1st) மட்டக்களப்பு – திக்கோடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை நேற்று(12) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாகாண செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் 13 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்திற்கான சுதேச மருத்துவ ஆணையாளர் R.ஸ்ரீதர், வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles