முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைக் கோவையும் மாதிரி விண்ணப்பமும் வௌியீடு

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைக் கோவையும் மாதிரி விண்ணப்பமும் வௌியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை ஒகஸ்ட் 18 ஆம் திகதிக்கு முன்னதாக பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது, அதில் குறிப்பிடப்படும் தகவல்களுக்கான தகுதிகளை 2023 ஜூன் 30 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனைக் கோவையையும் மாதிரி விண்ணப்பத்தையும்  www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles