இரு குழுக்கள் இடையிலான மோதலில் ஒருவர் பலி

Colombo (News 1st) இரத்தினபுரி – தெல்கொடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தெல்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம்(16) ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சை பெற்று வந்த இருவரை பார்வையிடுவற்காக சென்ற சிலருக்கிடையில் வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் மோதல் வலுப்பெற்றுள்ளது.

இதன்போது கத்தியால் குத்தி ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article
Next article
Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles